பழகுதற்கினிய…….
பல்லவி
பழகுதற்கினிய ஶ்ரீ ராமனைத் துதித்தேன்
நிழலெனத் தொடரும் ஜானகி லக்ஷ்மணனுடன்
துரிதம்
அனுமனனந்தன் கருடன் சுக்ரீவன்
சனகாதி முனிவர் பிரமன் வணங்கிடும்
அனுபல்லவி
அழகன் கேசவன் அடியார்க்கருள்பவன்
சுழல் சக்கரமேந்தும் திருமாலுமவனே
சரணம்
அழலேந்தும் நெற்றிக்கண்ணனும் பூஜிக்கும்
கழலடி உடையவன் காமனைப் படைத்தவன்
பழவினைப் பயன் தொலைய அவனை வேண்டி
மழலை மொழியிலவன் புகழ் பாடி
No comments:
Post a Comment