அன்னையே …….
பல்லவி
அன்னையே உன்னைத்தவிர யாருளாரிவ்வுலகில்
என்னைக்காக்க இது தருணமென்றறிந்தோர்
அனுபல்லவி
முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் முதலே
கன்னங்கரிய நிறக் கேசவன் சோதரி
சரணம்
பென்னம் பெரிய முலையுடையாளே
சின்னஞ்சிறு இடையும் அன்ன நடையும்
மின்னலைப் பழிக்கும் பார்வையுமுடைவளே
கன்னலே தேனே கற்பக தருவே
பன்னகசயனனும் பன்னகாபரணனும்
அன்னை சரச்வதியின் நாயகன் பிரமனும்
இன்னும் தேவேந்திரனும் யாவரும் வணங்கிடும்
தன்னிகரில்லாத ராஜ ராஜேச்வரியே
No comments:
Post a Comment