Sunday, 31 August 2014

தில்லை கோவிந்த ராஜன்









            தில்லை கோவிந்த ராஜன் 


              பல்லவி 


    புண்டரீகவல்லியின்  மனங்கவர் நாதனை 

    கோவிந்தராஜனை மனமாரத்துதித்தேன் 


                அனுபல்லவி 

     அண்டசராசரங்கள் அனைத்தையும் காத்திடும் 

      வண்புருடோத்தமனை மாலனைக் கேசவனை 

                   சரணம் 

      திண் தோளுடையவனை  கண்கவரழகனை 

      விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்தும் பெருமானை 

       உண்டுலகுமிழ்ந்தவனை கருநீல வண்ணனை 

       புண்ணிய தில்லை திருத்தலத்தில் பள்ளிகொண்ட 
   


           Visit Thillai Thiru Chitrakoodam and you will find a sudden calm and peace in yourself

கையோடு நீடு கனி உண்டு,
வீசு கடுங்கால் நுகர்ந்து, நெடுங்காலம் ஐந்து

தீயோடு நின்று, தவம் செய்ய வேண்டா
திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்

வாய் ஓது வேதம் மலிகின்ற தோல் சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்ந்த

தீஒங்க ஓங்கப் புகழ் ஓங்கு
தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே 






No comments:

Post a Comment