க்ஷீ ராப்திநாதன்
பல்லவி
திருப்பாற்கடல் சென்று திருநாராயணனின்
திருவடி சேர்ந்திடும் வரம் வேண்டி நின்றேன்
அனுபல்லவி
அருளாளன் ஆதிபிரான் அமலன் விமலன்
வேங்கடவன் வரதன் அனைவரையும் வணங்கியபின்
சரணம்
திருமால் கேசவன் அவன் நாமமே நினைந்து
அருந்தவ முனிவரும் ஆன்றோரும் சான்றோரும்
வருந்திக் காத்திருக்கும் வரிசையில் அடியேனும்
இருந்து அவனருளால் அவனையே துதித்து
No comments:
Post a Comment