श्रीराम राम रामेति रमे रामे मनोरमे ।
सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने ॥
ராம நாமமே துணை
பல்லவி
துயர் துடைக்கும் ராம நாமமே துதிப்போம்
உயர்ந்த அந்த ராம நாமமே நம் துணை
அனுபல்லவி
பயம் பவப்பிணி தனைப் போக்கிடும் நாமம்
மயர்வற மதிநலமளித்திடும் நாமம்
சரணம்
கயல் விழி பார்வதிக்கு சிவனுரைத்த நாமம்
நயமுடன் ஒரு நாமம் துதித்தாலும் போதும்
அயராது சொல்லும் ஆயிரமதற்கிணை
செயம் தரும் ஸ்ரீராம நாமமே போதும்
श्रीराम राम रामेति रामेति रमे रामे मनोरमे ।
सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने ॥
No comments:
Post a Comment