வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பி
சிந்தா மணியே திருவேங்கடம் மேய எந்தாய்
இனி யான் உன்னை என்றும் விடேனே.
பரகாலன் பனுவல்கள்
ஆழ்வார் திருவடிகளே சரணம்
திருவேங்கடமுடையான்
பல்லவி
திருவேங்கடச்சுடரே திருமாலே கேசவனே
திருவடி பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
திருமலை தனிலே எழுந்தருளிக் காட்சி தரும்
அருளமுதே அமரர் பணிந்திடுமாரமுதே
சரணம்
திருவிளக்கே எந்தன் மனம் புகுந்த தேனே
அருமருந்தே ஆயர் குலம் போற்றும் மாயவனே
அருமறை புகழ்ந்தேத்தும் திருவுறை மணிமார்பா
ஒருநாளுமுனையே இனியான் மறவேன்
No comments:
Post a Comment