Saturday, 16 August 2014

கண்ணன்





 

  கண்ணன் 


 பல்லவி 

கண்ணனை அனுதினம் வேண்டித்துதித்தேன் 

என்மனத் தாமரையிலெழுந்தருள வேண்டுமென 

 அனுபல்லவி 

 வண்ணமிகு அழகன் வெண்ணையுண்ட வாயனென் 

 எண்ணமெல்லாம் நிறைந்த  கேசவன் மாதவன் 

   சரணம் 

  விண்ணையும் மண்ணையும் மூவடியாலளந்தவன் 

  மண்ணையுண்ட  வாயிலண்டம் காட்டியவன் 

  குன்றேந்தி ஆயர்குலம்  காத்த கோபாலன் 

  புண்ணியம் செய்தோரின் கண்ணெதிரில் தெரியும் 
  

  

No comments:

Post a Comment