Saturday, 30 August 2014

பரம பதநாதன்


   பரம பதநாதன் 


பல்லவி  

 ஆதியுமந்தமுமில்லாத  சோதியே 

  பாதம் பணிந்திடுமெனக்கருள்வாயே 

அனுபல்லவி 

 வேதியாரோதிடும்  வேதப்பொருளே 

  தீதிலாதவனே கேசவா மாதவா 


   சரணம் 

   மாதினை மார்பினில் சூடிய மாலனே 

    ஆதியனாதியே ஆதவனும் நீயே 

     ஆதி தேவரையும் மூவரையுமாண்டு 

     ஆதிக்கம் செலுத்தும்  ஆதிபிரான் நீயே 


      நீதி நெறி காக்க ஈரைந்தவதாரம் 

      மேதினியிலெடுத்த சீதரனே மாயனே 

       சாதல் பிறப்பறுக்கும்  பரவாசுதேவனே 

        யாதுமாகி நின்ற பரமபத நாதனே 
                     ***  ***  ***

ஆதியான வானவர்க்கு மண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கு மாதியான வாதிநீ
ஆதியான வானவாண ரந்தகாலம் நீயுரைத்தி
ஆதியான காலநின்னை யாவர்காண வல்லரே
(Thirumazhisai Azhwar)
The first of all Celestial, the World and all that lies beyond, the cause of all Celestial, the cause of cause, is You my Lord! 
The Lord of all Celestial is bound by time that You decree. 
Oh Lord of time of timelessness! Now who can claim to fathom thee?

No comments:

Post a Comment