தேர்வலம் வரும் கணபதி
பல்லவி
தேரேறி பவனி வரும் பூரணனைக் கரிமுகனை
மகா கணபதியை உளமாரத் துதித்தேன்
அனுபல்லவி
பாரோர் புகழ்ந்தேத்தும் ஆனை முகத்தோனை
காரமர் மேனியனைக் கேசவன் மருகனை
சரணம்
தீரா வினைதீர்க்கும் தீன சரண்யனை
மாறனை மிஞ்சும் பேரழகுடையவனை
சீர்மல்கும் கணபதி அக்கிரகாரந்தனில்
ஊர்கூடி வடம் பிடித்து நேசமுடன் இழுக்கும்
No comments:
Post a Comment