தன்னிகரில்லாத கணபதி
பல்லவிதன்னிகரில்லாத கணபதியே உந்தன்
தாள் பணிந்தேன் எனை ஆண்டருள்வாயே
அனுபல்லவி
உன்னருளாலன்றோ உலகுயிரனைத்தும்
இன்னலிடரின்றி நடைபெறுகிறது
சரணம்
முன்னமௌவைக்கும் கபிலருக்குமருளிய
கன்னலே கரிமுகனே கேசவன் மருகனே
பன்னிரு கையன் முருகனின் மூத்தோனே
பன்னகாபரணன் பரமசிவன் மகனே
No comments:
Post a Comment