அடியார்க்கு நல்லான் கோவிந்தன்
பல்லவி
அருள் தரும் கோவிந்தன் திருவடி பணிந்தேன்
பெருமைக்குரிய திருமலைத் திருப்பதியில்
அனுபல்லவி
குருவநம்பியின் மண் பூவை ஏற்றவன்
திருமகள் அலமேலு கரம் பிடித்த கேசவன்
சரணம்
ஒருதரமவன் நாமம் சொன்னாலும் போதும்
வருமிடர் தவிர்ப்பான் வாஞ்சையுடன் காப்பான்
தரும நெறி காக்க தரணியிலவதரித்த
திருவேங்கடமுடையான் ஸ்ரீ நிவாசன்
No comments:
Post a Comment