Sunday, 31 August 2014

தத்துவப் பொருள்


தத்துவப் பொருள் 


பல்லவி

புதிராக  எலிமீதமர்ந்த கணபதியை

எதிர்நின்று பணிந்து மனதாரத் துதித்தேன்

அனுபல்லவி

துதித்திடுமடியார்க்கு நலமருளும் கரிமுகனனை

சதுர் மறை போற்றும் கேசவன் மருகனை

 சரணம்

   துதிக்கையும் பெருவயிறும் முறமெனக் காதுகளும்

    கயிற்றினைப் போல் வாலும் கல் தூணாய்க்காலுமுள்ள

    அதிசய ஆனை முகனை  விநாயகனை

     யாருக்கும் புரியாத ஓங்காரப் பொருளை

   

யானை வடிவம் கொண்ட விநாயகர், மூஞ்சூறு மீது அமர்ந்த ரகசியத்தை கேளுங்கள்.ஒரு பெரிய உருவம், ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர முடியுமா? நம்ப முடியவில்லையே! என்று தான் விநாயகரின் வாகனத்தைப் பார்த்தவுடன் நினைப்பார்கள். இதில் நுண்ணிய அர்த்தம் உள்ளது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக கடவுள் இருக்கிறார் என்பதே இதன் தத்துவம். அவரை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், கடவுளையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது என்பதே இதன் உள்ளர்த்தம்.

No comments:

Post a Comment