தந்திமுகத்தோன்
பல்லவி
உந்தன் தாள் பணிந்தேன் மகாகணபதியே
கதிநீயேயென்றுன் பதிவந்து துதி செய்தேன்
அனுபல்லவி
குந்தகமின்றியே கருமங்கள் நடைபெற
வந்தனை முதலிலனைவரும் புரிந்திடும்
சரணம்
நந்தியும் கணங்களும் தேவரும் வணங்கிடும்
தந்தி முகத்தோனே தாமரை பதத்தோனே
உந்திகமலன் கேசவன் மருகனே
சந்ததம் சிந்தையில் நாமமே போற்றி
No comments:
Post a Comment