Sunday, 24 August 2014

கரிமுகன்





          கரிமுகன் 



           பல்லவி      

  பதம் பணிந்துனையே  முதல் துதித்தேன்

   கணபதி நீயே கனிந்தருள் புரிவாய்

            அனுபல்லவி

   விதம் விதமான வடிவினில்  காட்சி தரும்

   மதவாரணமுகனே கேசவன் மருகனே

               சரணம்

      இதம் தரும் உலக  வாழ்வென்றும் சதமல்ல

       பதவி பணம் புகழ் எதுவும் நிலையல்ல

       கதம்பமலர் மாலை சூடிடும் கரிமுகனே

       சதமுந்தன் கழலடி நிழலென்றறிந்தே


   

No comments:

Post a Comment