Wednesday, 20 August 2014

அரங்கன்

       அரங்கன் 


         பல்லவி

    அரங்கனை அருள் தரும் கேசவனைத்துதித்தேன்

    அரங்கநாயகி  அருகிருந்து போற்றும்

          துரிதம்

     நரர்சுரர் நாரதர் சுகசனகாதியர்

     நான்முகநிந்திரன்  கரம் பணிந்தேத்தும்
     
         அனுபல்லவி

     கரங்களில் சங்கும் சக்கரமும் வைத்திருக்கும்

     பரமனைப் பாற்கடல் வாசனை  மாதவனை 

          சரணம்

     மரம் செடி கொடியாக   கோயிலில் படியாக

     பரந்து விரிந்திருக்கும் மண்டபத்தில்  தூணாக

     திறந்தவெளிக் குளத்தில் மீனாய்ப் பாசியாய்

     அரங்கமானகரிலோரங்கமாய்க் கிடக்கவே

   

No comments:

Post a Comment