Saturday, 30 August 2014

ஸ்ரீ வேணு கோபாலன்




  ஸ்ரீ வேணு கோபாலன் 

பல்லவி


 ஆயர்குலத் துதித்த  வேணுகோபாலனை
 மாயக் கண்ணனை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

தூய வெண்ணிலவின் அழகையும் மிஞ்சும்
பாயும் ஒளிதரும் பளிங்கு முகமுடைய

 சரணம்

   சாயக்கொண்டையில்  மயிலிறகணிந்து
   கோலக்குழலினை  கரங்களிலேந்தி
   தீய அரக்கரை  மாய்த்திடும் கேசவனை
    குன்றைக் குடையாக்கி குவலயம் காத்தவனை

    கோபியர் கொண்டாடும் பால கிருஷ்ணனை
   அபயமென்றழைத்த கரிக்குதவிய
  தேவகி  மைந்தனை நந்தகுமாரனை 
 ஆவினம் மேய்த்தவனை நீலவண்ணனை 

                *** ****  ***

     திருப்பாவை பாசுரம் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.
மாயன் - மாய வித்தை செய்பவன்; மந்திரக் காரன்; மறைந்திருப்பவன்;
ஏமாற்றுபவன்; விநோதன்; மாய நிறமுடையவன்; மேகவண்ணன்;
மன்னு - நிலைத்துள்ள; புகுதருவான் நின்றனவும் - பின்பு ( நம்மை அறியாமல் ) வருபவையும்;
Pasuram 5
The elusive son of blooming North Mathura;
Riverman de facto of grand Yamuna pure;
Appear'd in Ayar tribe a glow lamp and
Brought sanctity to mother's womb;
If we reach pure, shower fine flower and
Worship Him, Damodara the Lure;
With song in lips, mind engross'd,
The sins committed deliberate or inadvertent
In the past, present and future entire
Shall be burnt a refuse in bonfire;
Prithee, listen and consider, our damsel.
     

No comments:

Post a Comment