அச்சுதன்
பல்லவி
அச்சுதன் நாமம் ஒன்றே போதும்
மெச்சித் துதித்திடுமடியவர்க்கெல்லாம்
அனுபல்லவி
நச்சரவணை மீது பள்ளிகொண்டிருக்கும்
பாற்கடல் வாசன் கேசவன் மாதவன்
சரணம்
இச்சுவை அறிந்த பின்னே இந்திர லோகமாளும்
அச்சுவை அடியார்க்கெல்லாம் துச்சமே என்று கொள்வோம்
எச்சுவை வேறே எதுவும் நிச்சயம் இனியும் வேண்டாம்
பச்சை வண்ணன் அவன் ஆயிரம் நாமம் தன்னில்
No comments:
Post a Comment