Sunday, 10 August 2014

ஒப்பிலியப்பன்


       ஒப்பிலியப்பன் 


          பல்லவி


     அபயகரம் காட்டி அரவணைக்கக்  காத்திருக்கும்

      ஒப்பிலி யப்பனுனை மனமாரத்துதித்தேன்

             அனுபல்லவி

    சுப பலன்களைத்தரும் பூமி தேவி உடனிருக்கும்

     வைகுண்ட வாசனை மாதவனைக் கேசவனை

                 சரணம்

       உற்றார் சுற்றம் பெற்ற மக்கள் பெண்டிர்

       பற்றனைத்தும் துறந்தேன் உற்ற துணை நீயென

       கற்றுணர்ந்த பின்னே வேறேதும் பேணேன்

       பெற்றவனே விண்ணகர் மேவிய பெருமானே
       

No comments:

Post a Comment