கயிலை நாதன்
பல்லவி
கண்டேன் கயிலையில் கயிலை நாதனை
தண்டனிட்டு பணிந்தேன் அவனருள் பெறவே
அனுபல்லவி
அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்தும்
காத்து மழித்தும் முத்தொழில் புரிபவனை
சரணம்
கொண்டேன் பரவசம் கோடிவினை களைந்தேன்
தண்மதி பிறையும் கங்கையுமேந்திடும்
விண்ணோரும் மண்ணோரும் வியந்து போற்றும்
புண்ணியனை புனிதனைக் கேசவன் நேசனை
No comments:
Post a Comment