ஆனைமுகன்
பல்லவி
புகலவனென்றே மலரடி பணிந்து
மகாகணபதியை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
குக சோதரனை கேசவன் மருகனை
நிகர் தனக்கொருவருமில்லாத கரிமுகனை
சரணம்
பகலவன் ஒளியையும் மிஞ்சுமொளி யுடையவனை
அகம் முகம் மலரத் துதித்திடும் அடியார்க்கு
இகபரமிரண்டிலும் சுகமளிப்பவனை
சகலரும் போற்றும் ஆனைமுகத்தோனை
No comments:
Post a Comment