கேசவன்
பல்லவி
எனக்கினி உனையன்றி வேறு யார் துணை
தனக்குவமை இல்லாத சென்ன கேசவா
அனுபல்லவி
மனக்கவலை யனைத்தும் உனக்கென விட்டு விட்டு
தினமுந்தன் திருநாமமொன்றே துதித்திடும்
சரணம்
சனகாதி முனிவரும் தேவரும் இந்திரனும்
தனம் தரும் திருமகளும் நாரதரும் நான்முகனும்
அனைவரும் வணங்கிடும் அனந்த சயனனே
புனிதனுன் அரவிந்த பதமலர் பணிந்திடும்
No comments:
Post a Comment