தாமரைத் திருவடி
பல்லவி
உனது கழலடி நிழலொன்றே போதும்
கோவிந்தா புவியில் வேறேதும் வேண்டேன்
அனுபல்லவி
தினமுமுன் நாமமே மனமாரத் துதித்தேன்
தீன சரண்யனே கேசவா மாதவா
சரணம்
இனிய இந்திரப் பதவியும் சொர்க்கமும்
தனம் புகழ் கைவல்யம் எதுவும் வேண்டேன்
மனதுக்கினிய திருவேங்கடம் தனில்
அனவரதமுமுன் அருகிருந்து சேவிக்க
No comments:
Post a Comment