அஞ்சுகர பாலன்
பல்லவி
நஞ்சரவணிந்த சங்கரன் மகனை
குஞ்சர முகனை தஞ்சமடைந்தேன்
அனுபல்லவி
நஞ்சரவணைதுயிலும் கேசவன் மருகனை
அஞ்சுகர பாலனை ஆனைமுகத்தோனை
சரணம்
பஞ்சபூதமாய் விளங்கிடும் கரிமுகனை
வெஞ்சமரில் யானைமுக அரக்கனை வென்றவனை
சஞ்சலமிடர் களையும் குஞ்சித பதத்தானை
அஞ்சலென்றபயமளி த்தெனை ஆண்டருள
No comments:
Post a Comment