நேச கணபதி
பல்லவி
தேச நலன் வேண்டி ஆசையுடன் துதித்தேன்
பாசமிகு கணபதியே பரிந்தருள் புரிவாய்
அனுபல்லவி
வாசமலர் மாலைகள் அணிமணிகள் சூடிடும்
தேசுடைய கரிமுகனே கேசவன் மருகனே
சரணம்
நேசமுடன் துதிக்கும் அடியவர்க் கெல்லாம்
காசுபணம் செல்வாக்கு நல்வாழ்வளிப்பவனே
மாசிலாமணியே மல்லீஸ்வரன் மகனே
காசினி பணிந்தேத்தும் விக்ன விநாயகனே
No comments:
Post a Comment