ஸ்ரீ கணேசன்
பல்லவி
ஸ்ரீ கணேசா சரணம் திருவடி சரணம்
ஆகம வேத புராணங்கள் போற்றும்
அனுபல்லவி
பாகம்பிரியாள் உமையாள் மைந்தனே
ஏகதந்தனே கேசவன் மருகனே
சரணம்
சாகசங்கள் புரிந்த விக்ன விநாயகனே
யோகியர் ஞானியர் பணிந்திடும் பாதனே
மோகத்திலுழன்றிடும் ஏழையேன் எனையே
வேகமே தடுத்தாண்டு அருள் தர வேண்டினேன்
No comments:
Post a Comment