திருவேங்கடமுடையான்
பல்லவி
நிலம் நீர் நீள்விசும்பு காற்று வெளியாகிநின்ற
திருவேங்கடமுடையானை மனமாரத்துதிதேன்
துரிதம்
நாரதர் நான்முகன் சுகசனகாதியர்
நரபதி பசுபதி கரம்பணி ந்தேத்தும்
அனுபல்லவி
அலர்மேல் மங்கையின் கரம் பிடித்த கேசவனை
உலகில் சிறந்த திருமலையிலுறைபவனை
சரணம்
அலங்காரப்பிரியனை அமரர்கள் தலைவனை
நிலையிலா புவிதனில் நிலைத்திருப்பவனை
மலையப்பசாமியை ஏழுமலையானை
நலம் பெற வேண்டி திருவடி பணிந்து
அம்பரமனல்கால்நிலம் சலமாகிநின்றவமரர்க்கோன்,
வம்புலாமலர்மேல் மலிமட மங்கை தன்கொழுநனவன்,
கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும்,
செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே.
( பெரிய திருமொழி )
He is in the Pancha bhUthams (the five elements of Nature)- He is the Chief of DevAs- He is the Nayakan of Periya PiraaTTi- MahAlakshmi- He is My Emperumaan- staying at ThiruvEmkatam, the most beautiful fertile land, where gypsy women take care of the field. Oh mind! Reach there.
No comments:
Post a Comment