முந்தி விநாயகன்
பல்லவி
தூவி மலர் சொரிந்து நாவாரப்பாடி
சேவடி பணிந்து மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
சேவற்கொடியோன் சோதரனை கணபதியை
தேவகி மைந்தன் கேசவன் மருகனை
சரணம்
மூவாசைப் பிணிபோக்கும் முன்வினைப் பயன் நீக்கும்
தேவாதி தேவனை ஆனைமுகத்தோனை
மூவுலகும் போற்றும் முந்தி விநாயகனை
பாவியேன் எனையே ஆண்டருள வேண்டுமென
No comments:
Post a Comment