ஆதி கும்பேஸ்வரன்
பல்லவி
நம்முள்ளிருப்பவனை நாமறியா சிவனை
செம்பொன் மேனியனை மனமாரத் துதித்தேன்அனுபல்லவி
உம்பர் முனிவர் தொழும் தேவாதி தேவனை
அம்பலவாணனைக் கேசவன் நேசனை
சரணம்
அம்பிகையின் மனங்கவர் அகிலாண்டேச்வரனை
சம்பு கபாலியை சாம்பசதாசிவனை
கும்பமுனிக்கருள் செய்த ஆதி கும்பேச்வரனை
நம்பித் துதிப்போர்க்கின்ப மளிப்பவனை
கொம்புடைய மாடுதனை வாகனமாய்க் கொண்டவனை
அம்புலி கங்கை அரவணிந்தவனை
பம்பை உடுக்கு திரிசூலமேந்தும்
செம்பவள வாயனை சிங்காரவடிவினனை
அம்பலத்தில் கூத்தாடும் சிதம்பரநாதனை
வெம்மை தரும் அழலேந்தும் நெற்றிக் கண்ணனை
அம்பரமாய்த் தண்ணீராய் நிலம் நெருப்பு காற்றாகி
ஐம்பெரும் பூதமாய் விளங்கும் ஈசனை
No comments:
Post a Comment