மணக்குள கணபதி
பல்லவி
கணபதி உனையே தினம் துதித்தேனே
பணிந்திடும் எனையே காத்தருள்வாயே
துரிதம்
கணங்களும் நந்தியும் தேவரும் முனிவரும்
அணங்குகள் சித்தியும் புத்தியும் வணங்கிடும்
அனுபல்லவி
தணலேந்தும் நெற்றிக் கண்ணனின் மகனே
இணையடி நிழலே துணையென நம்பி
சரணம்
குணம் தரும் நிதியே கேசவன் மருகனே
பிணியிடர் போக்கும் ஆனைமுகத்தோனே
தணிகாசலனின் சோதரனே கரிமுகனே
மணக்குளம் பதிதன்னில் வீற்றிருப்பவனே
No comments:
Post a Comment