ஸ்ரீ மகாலட்சுமி
பல்லவி
மதிமுகமுடையாளை மகாலக்ஷ்மியை
கதியெனத் துதித்து அருள் தர வேண்டினேன்
அனுபல்லவி
யதுகுல திலகன் கேசவன் மார்பிலுறை
நிதிக்கதிபதியை நித்ய கல்யாணியை
சரணம்
இதழாயிரம் கொண்ட அரவிந்த மலர் நடுவில்
பதமாக வீற்றிருக்கும் ஆனந்த வடிவை
இதம் தரும் ஒருகோடி நிலவொளி உடையவளை
விதம் விதமான பொன்னாடையணிந்தவளை
பதமலர் பணிந்திடும் பக்தருக்கருள்பவளை
புது நவரத்தின அணிமணி புனைந்தவளை
ரதி மதன் நாணும் பேரழகுடையவளை
எதிலும் எங்கும் நிறைந்திருப்பவளை
No comments:
Post a Comment