ஏழுமலையான்
பல்லவி
மூவுலகும் புகழ்ந்தேத்தும் ஏழுமலையானுன்
சேவடி பணிவோர்க்கு குறையொன்றுமில்லை
அனுபல்லவி
தேவரும் முனிவரும் யாவரும் வணங்கிடும்
கேசவனுன் நாமம் நாவார உரைப்போர்க்கு
சரணம்
கோவில் படியேறி திருவேங்கடமுடையானை
கூவியழைத்திடும் நல்லடியார் தம்மை
தாவியணைத்து பரகதி நல்கிடும்
கோவிந்தனுனையே நாளும் துதிப்போர்க்கு
***********
பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே! பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை
மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை,
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்க டமலை யாண்டு, வானவர்
ஆவி யாயிருப் பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.
(Thirumangai Azhwar)
O Heart! You did right. The cowherd Lord who accepts devotees on Earth and takes them to his heavenly abode resides in Venkatam where clouds touch the peaks.
He is the soul of Celestial.
Today you too have entered into his service.
No comments:
Post a Comment