Friday, 29 August 2014

திருமலை கோவிந்தன்


திருமலை  கோவிந்தன் 


பல்லவி

கோவிந்தனுனையே  உளமாரத் துதித்தேன்

 கூவியழைத்துன்  நாமமே போற்றி 

அனுபல்லவி

 தீவினையழித்து  நல்வினை பெருக்கிடும்

  ஆவினம் காக்கும் கேசவனே மாதவனே

   சரணம்

   தேவியரிருவரும்  மேவிடும் திருமாலே

    கோவிலில் சிலையாய் நின்றருளும் வேங்கடவா

    தூவி மலர் சொரிந்துன்  திருவடி பணிந்து 

   பாவியேன் எந்தனை ஆண்டருள வேண்டுமென 

தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்
சேவியே னுன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே.அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய்
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே.
(Thondaradipodi Azhwar)
O Lord my Senkamal! I worship none but you.
You leaped over the heads of all the world.
My soul, my Ambrosia, my Lord, Sweet as my own life-breath!

Other than you, I certainly have none, O Woeful, woeful me!



No comments:

Post a Comment