பொற்றாமரையாள்
(Consort of Lord Valvil Rama
of Pullampoothangudi)
பல்லவி
பொற்றாமரை யாளின் பொற்பாதம் பணிந்தேன்
கற்றவர் புகழ்ந்தேத்தும் கேசவன் மர்பிலுறை
அனுபல்லவி
நற்றவ முனிவரும் நரர் சுரரனைவரும்
உற்ற துணையென பற்றித் துதித்திடும்
சரணம்
வற்றாத நதியாய் கருணை வெள்ளம் பெருகும்
பெற்றவளாய்க் காக்கும் பெரிய பிராட்டியை
உற்றமும் சுற்றமும் அவளேயென் றெண்ணி
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் எனைக்காக்க
No comments:
Post a Comment