Tuesday, 19 August 2014

ஆடிடும் கேசவன்

         ஆடிடும் கேசவன் 


             பல்லவி

       ஆடிடும் கேசவனைக் காணவே கண்ணொரு

       கோடியும் போதாதே - பிருந்தாவனம் தனில்

               அனுபல்லவி

        வேடிக்கையாய் பல வேடங்கள் புனைந்து

        சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் மனம் கவர

                    சரணம்

          தேடித்தவித்திடும் கோபியர்கள் சேர்ந்தாட

           நாடித்துதித்திடும் அடியவருடனாட

           ஈடிலா நந்தகோபர் களுமாட

           கூடிநிற்குமனைத்து  தேவர்களும் காண

           சூடிய மயில்பீலி கொண்டையுமாட

            நெற்றியில் சுட்டியும் பதக்கமுமாட

            காதிரண்டில் மகரக் குண்டலங்களாட

            கழுத்தில் மலர்மாலை மணி மாலையாட
       
           இடையாட உடையாட இரு கைவளையாட

             காலிரண்டில் கொலுசாட தண்டை கிண்கிணியாட

             வாயில் குழலிசையாட  விரல்களதன் மீதாட      

             வண்டினங்கள் மகிழ்ந்தாட  மானாட மயிலாட 

No comments:

Post a Comment