Sunday, 10 August 2014

கந்தசோதரன்



            கந்தசோதரன் 


              பல்லவி

         கந்தசோதரனை  மகாகணபதியை

          சிந்தையில் வைத்து சீரடி போற்றினேன்

               அனுபல்லவி

         விந்தைகள் பல புரிந்த வேழ முகத்தோனை

         தந்தையும் தாயும் சொந்தமுமானவனை

                     சரணம்

           இந்தினிளம்பிறை சூடிய கரிமுகனை

            நந்த குமாரன் கேசவன் மருகனை        

             நந்தியும் கணங்களும் வணங்கிடும் சுமுகனை

            முந்தைய பழவினைப் பயன்களை போக்கிட
             

No comments:

Post a Comment