வேதவல்லி / மகாலக்ஷ்மி
பல்லவி
மகாலக்ஷ்மியை மனமாரத்துதித்தேன்
சுகம் செல்வம் நல்வாழ்வு அனைத்தையுமளித்திடும்
அனுபல்லவி
மகாவிஷ்ணுவின் மணி மார்பில் வீற்றிருக்கும்
சுகுணசுந்தரியை கேசவன் துணைவியை
சரணம்
இகபரமிரண்டிலும் சுகமளிப்பவளை
சகலரும் போற்றும் உலகநாயகியை
மகேஸ்வரியும் சரஸ்வதியும் நேசிக்கும்
அல்லிக்கேணி வளர் வேதவல்லியை
No comments:
Post a Comment