அழகு ( part I)
வண்ணம் அழகு வடிவம் அழகு கண்ணன் அழகு கண்கள் அழகு
கொண்டை அழகு கேசம் அழகு சூடிய பீலி அதுவும் அழகு
வதனம் அழகு இதழ்கள் அழகு புன்னகையழகு நாசியுமழ்கு
இதயம் அழகு இமைகள் அழகு மதுராபதியின் அனைத்தும் அழகு
திண் தோளழகு கழுத்தும் அழகு கௌத்துபமஅழகு துளபம் அழகு
அணிமணியழகு ஆரங்களழகு திருவும் அழகு மார்பும் அழகு
நடையும் அழகு உடையும் அழகு சொல்லும் அழகு பொருளும் அழகு
குழலும் அழகு இசையும் அழகு மதுராபதியின் உலகே அழகு
No comments:
Post a Comment