கண்ணபிரான்
பல்லவி
கண்ணனுக்கிணையாக வேறொரு தெய்வம்
வையகத்திலிலை வானுலகிலுமில்லை
அனுபல்லவி
எண்ணத்திலவன் நாமம் எண்ணித் துதிப்போர்க்கு
எண்ணிய தனைத்தையும் அள்ளிக் கொடுப்பான்
சரணம்
தண்மதி முகத்தினன் தாமரை நாபன்
மன்மதனைப் படைத்த மாதவன் கேசவன்
கண்கவர் கோபியர் மனங்கவர் மாலன்
விண்ணோரும் மண்ணோரும் பணிந்திடும் மாயன்
அண்ணன் கோயிலில் அமர்ந்திருக்கும் அழகன்
புண்டரீகக்ஷன் செந்தாமரைகண்ணன்
கண்ணபுரத்துறையும் நீலவண்ணன்
விண்ணகர் மேவும் ஒப்பிலா அப்பன்
No comments:
Post a Comment