Wednesday, 6 August 2014

கோவிந்தராஜன்

கோவிந்தராஜன் 

பல்லவி 

கோவிந்தராஜனை  ஸ்ரீனிவாசனை 

திருப்பதி திருத்தலத்தில் கண்டு பணிந்தேன் 

அனுபல்லவி 

 தேவியர்  இருபுறம் உடனிருந்து காட்சி தரும் 

  தேவாதி தேவனை ஸ்ரீ வாசுதேவனை 

 சரணம் 

  மூவாசைப்பிணி விலக முன்வினைப்பயன்  நீங்க 

   நாவிலும் மனத்திலும் நாமமே உரைத்து 

   ஆவலுடன் கேசவன் அவனையே நினைந்து 

    சேவடி போற்றி  அனுதினம் துதித்தேன் 

No comments:

Post a Comment