திருவரங்கன்
பல்லவி
திருவரங்கநாதனை மனமாரத் துதித்தேன்
திருப்பாற்கடல் நீங்கி திருவரங்கம்தனில் துயிலும்
அனுபல்லவி
திருவரங்க நாயகியின் மனம் கவர்ந்த கேசவனை
திருப்பாணாழ்வாரை உடன் சேர்த்துக் கொண்டவனை
சரணம்
கருணையுடன் வீடணனுக்கபயமளித்தவனை
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியை மணந்தவனை
தருமநெறி தழைத்திட அவதாரமெடுத்தவனை
குருவருளும் திருவருளும் எனக்கருள வேண்டுமென
No comments:
Post a Comment