Wednesday, 13 August 2014

விநாயகன்






                       



விநாயகன் 



பல்லவி 

விநாயகனை மனமாரத்துதித்தேன் 

அநாத நாதனை  ஆனை முகத்தோனை 

அனுபல்லவி 

சனாதன தர்மம் தழைத்திட வேண்டி 

அவனியிலவதரித்த புராண புருஷனை 


சரணம் 

வினோத வேழ முகத்தினை உடையானை 

மனோகர மான அழகுடையானை 

அனாதியானவனைக்  கேசவன் நேசனை 

கனாவிலுமவன்  கழலடி  மறவாது 








No comments:

Post a Comment