அய்ங்கரன்
பல்லவி
மூவுலகும் பணிந்தேத்தும் மகாகணபதியை
ஆவலுடன் கண்டு மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
தேவரும் முனிவரும் நந்தியும் கணங்களும்
மாவிடை வாகனனும் கேசவனும் போற்றும்
சரணம்
தூவி மலர் சொரிந்து சேவடி பணிந்தோர்க்கு
மூவாசைப் பிணி போக்கி முன்வினை பயன் நீக்கும்
தேவாதி தேவனை ஆனைமுகத்தோனை
பூவுலகம் புகழும் அய்ங்கரனைக் கரிமுகனை
No comments:
Post a Comment