சங்கரன் பங்கிலுறை …..
பல்லவி
சங்கரன் பங்கிலுறை அங்கம் ஆளும் ஈச்வரியின்
அங்காளப் பரமேச்வரியின் பங்கயப் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
திங்கள் பிறையணிந்த சங்கரி கௌரியின்
பங்கய நாபன் கேசவன் சோதரியின்
சரணம்
எங்கும் நிறைந்திருக்கும் ஒய்யாரி ஓங்காரி
அங்கமில் காமனுக்கு அருளளித்த சிங்காரி
சிங்க வாகனத்தில் மங்களமாய் பவனி வரும்
மங்காத புகழ் மேவும் மேல்மலையனூர் வளர்
No comments:
Post a Comment