Saturday, 23 July 2022

முருகன் கரத்தில்…..

 ஸக்தே பஜேத்வாம் ஜகதோ ஜனித்ரீம்

ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ
- ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய வேல் ஸ்லோகம்.

பொதுப்பொருள்: அசுரர்களைக் கொன்ற சக்தி மிகுந்த வேலே! உலகத்தையே பாதுகாத்து அருளும் வல்லமை பெற்ற வேலே! வணங்குவோரின் மனபயத்தை எளிதில் போக்கும் தீரம் மிக்க வேலே, உன்னை வணங்குகிறேன். முருகப் பெருமானின் திருக்கரத்தில் அலங்காரமாக வீற்றிருக்கும் சக்தி வடிவமே! உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீ எப்போதும் என் இதயத்தில் வீற்றிருந்து, மன உறுதி தந்து அருள வேண்டும். 

    
                                 முருகன் கரத்தில்…..


                                          பல்லவி

                           முருகன் கரத்தில் விளங்கும் சக்தி வேல்
                           திருவருள் பெற வேண்டி அனைவரும் துதிக்கும் வேல்

                                          அனுபல்லவி
                       
                           பெருமைக்குரிய சக்தி வடிவான வேல்
                           திருமால் கேசவன் மருகன் கை வேல்

                                              சரணம்

                          அரக்கரையழித்த வேல் உலகைக் காக்கும் வேல்
                          மரணபயம் மனபயம் அனைத்தையும் போக்கும் வேல்
                          சரவணனேந்தும்  வெற்றி வேல் வீர வேல்
                          கரம் பணிந்து சிரம் தாழ்த்தி நான் வணங்கும் ஞானவேல்

No comments:

Post a Comment