பச்சை நாயகியே….
பல்லவி
பச்சை நாயகியே மீனாக்ஷி உனையே
இச்சையுடன் துதித்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
அச்சுதன் கேசவன் சோதரியே மாயே
நச்சரவணிந்த சிவபெருபெருமான் நாயகியே
சரணம்
சச்சரவு செய்த அரக்கரை மாய்த்தவளே
மெச்சித் துதித்திடும் அடியார்க்கருள்பவளே
உச்சித்திலகம் அணிந்திருக்குமீச்வரியே
அச்சம் நாணமெனும் அருங்குணமுடையவளே
No comments:
Post a Comment