சதுரங்கமாடிடும்……
பல்லவி
சதுரங்கமாடிடும் சிவபெருமானை
சதுரங்கவல்லப நாதனைத் துதித்தேன்
அனுபல்லவி
சதுர்புஜன் கேசவனும் சதுர்முகனும் சதுர்மறையும்
எதிர் நின்று வணங்கிடும் நமச்சிவாயனை
சரணம்
புதுப் பொலிவுடன் திகழும் ராஜராஜேச்வரியை
இதமுடன் மணந்த புஷ்பவனேச்வரனை
கதியவன் பதமென போற்றிப் பாடி
புதுப்புனல் பாமணி பாயும் பூவனூர்த் தலத்தில்
No comments:
Post a Comment