அத்யந்த சஞ்சலம க்ருத்ரிமமஞ்ஜனம் கிம்
ஜம்கார பங்கி ரஹிதா கிமு ப்ருங்கமாலா |
தூமாங்குர: கிமு ஹுதாஶன ஸங்கஹீன:
காமாக்ஷி நேத்ரருசி நீலிம கந்தளீ தே ||83|| கடாக்ஷ சதகம்
अत्यन्तचञ्चलमकृत्रिममञ्जनं किं
झङ्कारभङ्गिरहिता किमु भृङ्गमाला ।
धूमाङ्कुरः किमु हुताशनसङ्गहीनः
कामाक्षि नेत्ररुचिनीलिमकन्दली ते ॥83॥
ஹே காமாக்ஷி ! உனது நேத்ரங்களின் காந்தியான கருமையான சேர்க்கையானது அதிகமான சஞ்சலத்தை உடையதும், பிறரால் செய்யப்படாத மை என்றோ, ஐங்கார சப்தமில்லாத வண்டுகளின் வரிசையென்றோ, அக்னி சம்பந்தமற்ற கருத்த புகை தாரையோ என்று நினைக்கக் கூடியதாயிருக்கிறது
காமாக்ஷி ….
பல்லவி
காமாக்ஷி உந்தன் கழலடி பணிந்தேன்
தாமதமின்றியே எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
சாமானியனையும் மேதாவியாகச்செய்யும்
ஶ்ரீமன் நாராயணன் கேசவன் சோதரி
சரணம்
மருண்ட விழியிரண்டில் இயற்கை மை உண்டோ
கருவண்டின் வரிசையோ உன்னிரு விழிகளும்
நெருப்பில்லாமலே வரும் கரும் புகையோ என
குறு குறுக்கச் செய்ததுன்னழகிய திருமுகம்
No comments:
Post a Comment