குருவுக்கு குருவான……
பல்லவி
குருவுக்கு குருவான தக்ஷிணாமூர்த்தியை
திருவடி பணிந்து அருள் தர வேண்டினேன்
அனுபல்லவி
பெருந்தவ முனிவர்களும் மறையறிந்த ஞானிகளும்
இருபுறமமர்ந்திருக்க சின் முத்திரை காட்டும்
சரணம்
திருமுகமொளியுடன் மௌனமே மொழியாக
இருவினைப் பயனான பிறப்பிறப்பை நீக்கும்
குருவாக ஏற்று மூவுலகும் போற்றும்
பெருமானை ஆசனை ஈசன் சிவனை
ஆலமரத்தடியே அழகுடனமர்ந்து
பால குருவாயிருந்து வயது முதிர்ந்த
மாணவ முனிவர்கட்கு மௌன மொழியலே
பாடங்கள் பயிற்றுவிக்கும் அதிசயமான
தவயோகியர் முனிவருலகோரனைவருக்கும்
பவரோகம் தீர்த்திடும் அருமருந்தாகி
புவனமனைத்துக்கும் குருவாய் விளங்கிடும்
சிவபெருமானைக் கேசவன் நேசனை
ஓமெனும் பிரணவப்பருளானவனை
சகுண நிர்க்குண வடிவானவனை
ஆலமரத்தடி வேராயிருப்பவனை
சத்சிதானந்தனை சாந்த மூர்த்தியை
No comments:
Post a Comment