க்ரான்தேன மன்மததேன விமோஹ்யமான-
ஸ்வான்தேன சூததரு மூலகதஸ்ய பும்ஸ: |
காந்தேன கிஞ்சிதவலோகய லோசனஸ்ய
ப்ராந்தேன மாம் ஜனனி காஞ்சிபுரீ விபூஷே ||80|| கடாக்ஷ சதகம்
क्रान्तेन मन्मथदेन विमोह्यमान-
स्वान्तेन चूततरुमूलगतस्य पुंसः ।
कान्तेन किञ्चिदवलोकय लोचनस्य
प्रान्तेन मां जननि काञ्चिपुरीविभूषे ॥80॥
காஞ்சீ நகருக்கு அணியாக இருக்கும் காமாக்ஷியே! ஆம்ரவிருஷத்தின் அடியில் வஸிப்பவரான ஏகாம்ரநாதனுடைய சேர்க்கையால் ஏற்பட்ட காமவேகத்தினால் மோஹமடைந்த மனதோடு கூடியதும், அழகுள்ளதுமான உன்கடைக் கண்ணால் என்னை சிறிது கடாஷிப்பாயாக! .
பூமண்டலம்….
பல்லவி
பூமண்டலம் போற்றும் தேவி காமாக்ஷியே
காஞ்சிமாநகரின் அணிகலனாயிருப்பவளே
அனுபல்லவி
தாமரை மலர்நாபன் கேசவன் சோதரியே
சாம முதல் வேதங்கள் புகழ்ந்தேத்தும் ஈச்வரியே
சரணம்
மாமரத்தடி யமர்ந்த ஏகாம்ரநாதனுடன்
காமவசப்பட்ட மோக மனத்துடனே
ஏமம் மிகுந்த உன் கடைவிழிப் பார்வையால்
தாமதமின்றியே எனக்கருள்வாயே
No comments:
Post a Comment