இருப்பாலும் பிறப்பாலும்……
பல்லவி
இருப்பாலும் பிறப்பாலும் இயல்பாலும் பெருமை கொண்ட
திருமகளை அலைமகளை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
திருவேங்கடமுடையானை அகலக்கில்லேனென்று
திருமால் கேசவனின் திருமார்பிலுறைபவளை
சரணம்
கருப்பையிலுழலாத பிறப்பையுடையவளை
இருக்குமிடம் சிறக்கச்செய்யும் திருவென்னும் பெயராளை
அருங்குணம் நற்பண்பு அருளுமியல்புடையாளை
திருவரங்கம் தனிலுறையும் பெரிய பிராட்டியை
No comments:
Post a Comment